News December 29, 2024

செகந்திராபாத் – ராமநாதபுரம் ரயில் சேவை நீட்டிப்பு

image

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டித்து தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது‌. அதன்படி செகந்திராபாத் – இராமநாதபுரம் சிறப்பு ரயில் (07695) ஜனவரி 1, 8, 15, 22, 29, பிப்ரவரி 5,12,19,26, மார்ச் 5, 12, 19, 26 ஆகிய புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.45 மணிக்கு சென்றடையும் என தகவல்.

Similar News

News April 6, 2026

மதுரை: அமைச்சர் பி.மூர்த்திக்கு ரூ.13.58 கோடி சொத்து

image

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பி.மூர்த்திக்கு ரூ.10.81 கோடி அசையா சொத்துகளும், ரூ.2.77 கோடி அசையும் சொத்துகளும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மூர்த்தியின் மனைவி செல்லம்மாள் பெயரில் ரூ.1.35 கோடி சொத்துகள் உள்ளன.

News April 6, 2026

மதுரை: சற்று நேரத்தில் சாத்தான்குளம் வழக்கில் தண்டனை

image

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் 9 போலீசாருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

News April 6, 2026

மதுரை: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்.. இத பண்ணுங்க!

image

மதுரை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!