News April 22, 2025
செகந்திராபாத் இரயில் இராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

இராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே இயங்கி வரும் சிறப்பு ரயில் நாளை (ஏப்.23) முதல் இராமேஸ்வரம் வரை நீட்டித்து இயங்க இருக்கிறது. மேலும் வரும் மே மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வழி – நல்கொண்டா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் பல இடங்களில் சிவகங்கை, மானாமதுரை இராமநாதபுரம், இராமேஸ்வரம் வரை நீட்டித்துள்ளனர்.
Similar News
News April 22, 2025
ராமநாதபுரம் மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஏப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
News April 22, 2025
சுற்றுலா பயணிகளை நாட்டுப் படகில் ஏற்றினால் நடவடிக்கை

கோடை விடுமுறை துவங்கியதால் தொண்டி கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மீன்பிடி படகுகளில் சில மீனவர்கள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். ஒரு படகில் 20-க்கும் மேற்பட்டோர் செல்வதால் ஆபத்து ஏற்படுகிறது. இதனால் மரைன் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
News April 22, 2025
இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE