News December 9, 2025
சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தது ஜிகே மணி தான்!

பாமகவின் உள்கட்சி பிரச்னைகளுக்கு பாஜகவே காரணம் என திமுக கூறி வந்த நிலையில், குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தான் தலைவரான அடுத்த நாளில் இருந்தே ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது அவர் தான் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News December 19, 2025
சிறுபான்மை மக்களின் காவலன் அதிமுக: EPS

அதிமுக சார்பில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பேசிய EPS, சிறுபான்மை மக்களின் காவலனாக அதிமுக உள்ளது என்றார். மேலும், தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் விடியல் என்பதே இருக்காது என்ற அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

மார்கழி தொடங்கிய முதல்நாளே தமிழகத்தில் மழை பெய்தது. தற்போது, மழை குறைந்து பனியின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் காலையில் பனிமூட்டம் நிலவும் என IMD கணித்துள்ளது. அதனால், அதிகாலை நேரத்தில் வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். பணிக்குச் செல்பவர்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டுங்கள். ஸ்வெட்டர், மப்ளர் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.
News December 18, 2025
ஷில்பா ஷெட்டி வீட்டில் ஐடி ரெய்டு

ஷில்பா ஷெட்டியின் மும்பை வீட்டில் வருமான வரித்துறை (IT) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாஸ்டியன் ஹோட்டல் தொடர்பான வரிஏய்ப்பு புகாரில் இச்சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவராக ஷில்பா உள்ளார். அதேநேரம், பெங்களூருவில் உள்ள பாஸ்டான் ஹோட்டலிலும் IT அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.


