News January 20, 2026
சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள்: CM ஸ்டாலின்

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை CM ஸ்டாலின் வழங்கியுள்ளார். கூட்டணி கட்சிகளில் நம்மை பிடிக்காதவர்கள் சிலர் இருக்கதான் செய்வார்கள் என்றும், அவர்கள் தேவையில்லாத கருத்துகளை கூறி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் அந்த சூழ்ச்சியில் சிக்கி பலியாகிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 30, 2026
கிருஷ்ண துளசி vs ராம துளசி! வீட்டில் எது இருக்கணும்?

ராம துளசி பச்சை நிறத்திலும், கிருஷ்ண துளசி ஓரளவு பழுப்பு மற்றும் ஊதா நிறத்திலும், குடை வடிவத்திலும் காணப்படுகிறது. ராம துளசி மிகவும் லேசான நறுமணத்தை கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிருஷ்ண துளசி மிகவும் வலுவான நறுமணத்தை கொண்டுள்ளது. வீட்டின் வடகிழக்கு திசையில், கிருஷ்ண துளசியை நடுவது வீட்டின் நிதி நிலைமையை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News January 30, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $104.27 (இந்திய மதிப்பில் ₹9,578) உயர்ந்து $5,412.23-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $3.88 அதிகரித்து $117.3 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
News January 30, 2026
திமுகவின் திடீர் ஊதுகுழல் போல பேசும் EPS: தவெக

கரூரில் 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் காரணம் EPS கூறிய நிலையில் அவருக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். கரூர் சம்பவத்தில் அன்று உண்மையை உரக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் EPSக்கும், இன்று திமுகவின் திடீர் ஊதுகுழல் போல, தான் பேசியதையே மாற்றிப் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் EPSக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்றும், மக்களின் தலைவர் விஜய் என்பதை காலம் விரைவில் புரிய வைக்கும் எனவும் கூறியுள்ளார்.


