News July 20, 2024
சூழலியல் செயற்பாட்டாளருக்கு எம்.பி இரங்கல்

மறைந்த அரிட்டாபட்டி சூழலியல் செயற்பாட்டாளர் ரவிச்சந்திரனின் மறைவுக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இரங்கலை தெரிவித்துள்ளார். அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அரசு அறிவித்ததற்கு காரணமாக இருந்ததில் ரவிச்சந்திரனின் செயல்பாடு மிக முக்கியமானது. அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதல் தெரிவித்துள்ளார். இதேபோல் இவரது மறைவிற்கு சகாயம் ஐஏஎஸ் இரங்கலை தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
மதுரை: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

மதுரை தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனைப் பெற கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.
News July 8, 2025
‘போலீஸ்கிட்ட போட்டு கொடுத்தவருக்கு’ வெட்டு

மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 55. இவர் வீட்டருகே பராமரிப்பற்ற கட்டடம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு பாண்டி தொடர்ந்து தகவல் தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்றவர்கள் இரவு வீட்டின் முன் பேசிக்கொண்டிருந்த பாண்டி, மகன் கார்த்திக்கை 35, பட்டா கத்தியால் வெட்டி, ‘போலீஸ்கிட்டே போட்டு கொடுக்குறீயா’ என மிரட்டியுள்ளனர்.
News July 8, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.