News March 14, 2025

சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை

image

கம்பைநல்லுார் அடுத்த, கே.ஈச்சம்பாடியில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 6 முதல், 8ம் வகுப்பு கட்டடங்களின் கூரை சீரமைக்கப்பட்டு, இரும்பு தகடுகளான ஷீட்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம்( மார்ச் 12) மாலையில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால், பள்ளி கூரையில் இருந்த ஷீட்கள் தூக்கி வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Similar News

News March 6, 2026

தருமபுரி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 6, 2026

தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 6, 2026

தருமபுரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

image

தருமபுரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!