News February 23, 2026

சூரிய ஒளி எப்போது உடலுக்கு நல்லது?

image

எந்த நேரத்தில் உள்ள சூரிய ஒளி வைட்டமின் டி-யை பெற உதவும் தெரியுமா? காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இந்த நேரத்தில் புற ஊதாக்கதிர்கள் அதிகமாகவும், நிழல்கள் குறைவாகவும் இருக்கும். அந்த சமயத்தில் கைகள், கால்கள் மற்றும் முகம் என உடல் பாகங்கள் மீது சூரிய ஒளி அதிகபட்சமாக சுமார் 15 நிமிடங்கள் படரும்படி நேரத்தை செலவிடலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

Similar News

News February 26, 2026

நாளை பேச்சுவார்த்தை இல்லை: நயினார்

image

மார்ச் 1-ம் தேதிக்கு பிறகே NDA-வில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை பியூஷ் கோயல் தமிழகம் வரவில்லை எனவும், EPS உடன் கலந்து பேசிவிட்டு பேச்சுவார்த்தைக்கான நாளை பாஜக முடிவு செய்யும் என்றும் கூறினார். கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே பேச்சுவார்த்தை இழுபறிக்கு காரணம் என கூறப்படுகிறது.

News February 26, 2026

வெற்றியல்ல.. மாபெரும் வெற்றி தேவை!

image

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய மேட்சில், இந்தியாவிற்கு வெற்றி அல்ல, மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அதாவது முதலில் இந்தியா பேட்டிங் செய்தால், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால், 181 ரன்களை ஜிம்பாப்வே அடித்தாலும், அதை 12.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும். சோதனையை வென்று முன்னேறுமா இந்தியா?

News February 26, 2026

சம்பளம் மேலும் ₹5,000 உயர்ந்தது.. அமைச்சர் அறிவிப்பு

image

கல்லூரி கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை மேலும் ₹5,000 உயர்த்தி அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். இதன்படி, கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ₹25,000 – ₹30,000 ஆகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ₹20,000 – ₹25,000 ஆகவும் ஊதியம் உயர்ந்துள்ளது. இந்த ஊதிய உயர்வு மார்ச் 1 முதல் அமலாகிறது. இதன் மூலம் 9,646 விரிவுரையாளர்கள் பயனடைவர்.

error: Content is protected !!