News October 26, 2025

சூரசம்காரத்திற்காக 17 வாகனம் நிறுத்தும் இடங்கள்

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 27 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதனையொட்டி 26,27 தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக 17 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு வீரபாண்டிய பட்டினத்தில்ஒரு வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு பேருந்துகள் நிறுத்துவதற்கு தனியாக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 31, 2026

தூத்துக்குடியில் 117 போலீசார் கூண்டோடு மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 117 தலைமை காவலர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 31, 2026

தூத்துக்குடி: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

தூத்துக்குடி: வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை

image

கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோலப்பொடி வியாபாரி மாரீஸ்வரன் (43). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமியும் (75) நேற்று (ஜன.31) மாலை வழக்கம்போல ஒன்றாக மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராமசாமி அரிவாளால் மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கோவில்பட்டி போலீசார் ராமசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!