News March 24, 2024
சூட்கேசில் பெண் சடலம் இருவர் கைது

ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20-ஆம் தேதி சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட பெண் தேனியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. கத்தாரில் வேலை பார்த்தபோது நடராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கோவையில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்றனர். போலீசார் விசாரணையில் நடராஜன் மற்றும் நண்பர் கைது.
Similar News
News August 14, 2025
சேலம் மாவட்ட மனநல காப்பகங்களுக்கு ஒரு மாத கெடு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல காப்பக நிறுவனங்களும் ஒரு மாதத்திற்குள் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலோ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
News August 14, 2025
நுண்ணறிவுப் பிரிவு எஸ்.எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம்

நுண்ணறிவுப் பிரிவு அழகாபுரம் எஸ்எஸ்ஐ சவுந்தர், சூரமங்கலத்திற்கு மாற் றப்பட்டுள்ளார். அஸ்தம் பட்டி எஸ்எஸ்ஐ சேட்டு காரிப்பட்டிக்கும், காரிப்பட்டி எஸ்எஸ்ஐ காவேரி கன்னங்குறிச்சிக்கும், கன்னங்குறிச்சி எஸ்எஸ்ஐ பூபதி அஸ்தம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீராணத்திற்கு எஸ்எஸ்ஐ வைத்திலிங்கம், அழகாபுரத்திற்கு எஸ்எஸ்ஐ பாஸ்கர் இடமாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவு!
News August 13, 2025
JUST IN:சேலத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்.15ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.