News April 29, 2024
சுற்றுலா வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்.

கணபதி நல்லாம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 17 போ் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக ஜெகநாதன் (30) என்பவரது சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றனா். திருச்சி சாலையில் சுங்கம் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 17 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 23, 2025
போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் சேவை நாளை ரத்து

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி காலை 9.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல அன்றைய தினம், மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூா் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அதில் அறிவித்துள்ளது.
News August 23, 2025
கேரளா ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஆக.24 ஆம் தேதி ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில், திப்ரூகா் – கன்னியாகுமரி விரைவு ரயில், பாட்னா- எா்ணாகுளம் விரைவு ரயில், தாம்பரம் – மங்களூரு விரைவு ரயில் கோவை வழித்தடத்தில் இயக்கப்படாமல் இருகூா் – போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது
News August 23, 2025
கோவை: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <