News November 13, 2024

சுற்றுலா தலமாக மாறுகிறதா இருக்கன்குடி.?

image

அர்ச்சனா நதி வைப்பாறு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இரு நதிகளையும் இணைத்து கட்டப்பட்டுள்ள அணையில், வண்ணவிளக்கு, செயற்கை நீர் ஊற்றுடன் பூங்கா, படகு விடுவதன் மூலம் சிறந்த சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளது.

Similar News

News November 19, 2024

தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

image

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. பை பாஸ் சாலையில் நடந்த முகாமிற்கு, விருதுநகர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார். சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

News November 19, 2024

ராஜபாளையத்தில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 19, 2024

ஸ்ரீவியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் புகையிலை தடுப்பு சம்பந்தமாக எஸ்.ஐ. ஜோதி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த முனீஸ்வரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 16 பவுச்சிகளை பறிமுதல் செய்தனர்.