News May 22, 2024
சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி கையேடு

47-வது ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி இன்று (மே 22) தொடங்க உள்ளதையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி கையேடு QR கோடு முறையில் அச்சடிக்கப்பட்டு ஏற்காடு அடிவாரம் சோதனை சாவடியைக் கடக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News August 22, 2025
சேலம் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

சேலம் மாநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, ” தற்போது WhatsApp மூலம் RTO Challan எனப்படும் போலி செயலிகள் பரவி வருகின்றன. இதனை டவுன்லோட் செய்து install செய்தால், உங்கள் மொபைல் தகவல்கள் திருடப்படுவதோடு, மோசடிக்காரர்கள் தவறான முறையில் பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற போலி செயலிகளை நம்பாமல் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT
News August 21, 2025
யூரியாவைப் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் யூரியாவைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியார் உர விற்பனை நிலையத்தார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் உர விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News August 21, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.