News June 24, 2024
சுற்றுலாத் தலமாகும் ‘கல்வராயன் மலை’

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில், இன்று(ஜூன் 24) திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் அனுமதி பெற்று கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 60% தீக்காயத்துடன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News July 9, 2025
கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் குறைத் தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வாராந்திர குறைத்தீர்வு கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. ராஜத் சதுர்வேதி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள பொதுமக்கள் எஸ்.பி-யை நேரில் சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.பி அறிவுரைத்தனார்.
News July 9, 2025
கள்ளக்குறிச்சியில் சிறப்பு கடன் தீர்வு திட்டம்

கள்ளக்குறிச்சியில் பண்ணை சாரா கடன் மற்றும் இதர நீண்ட கால நிலுவைகளுக்கான சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் வெளியிட்ட தகவலின்படி, கடன்தாரர்கள் தங்கள் நிலுவைத் தொகையை 9% சாதாரண வட்டியுடன் 2025 செப்டம்பர் 23-க்குள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவுகள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.