News November 14, 2025

சுற்றுச்சூழல் நாயகி காலமானார்!

image

கர்நாடகாவை சேர்ந்த புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், பத்மஸ்ரீ சாலுமரத திம்மக்கா காலமானார். ‘மரங்களின் அன்னை’ என கர்நாடக மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், சுமார் 80 ஆண்டுகளாக கணவருடன் சேர்ந்து, 8,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். 114 வயதான அவர், வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்னை காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். வணங்குகிறோம் தாயே!

Similar News

News November 14, 2025

20 ஆண்டுகளில் RJD சந்தித்த பெருந்தோல்வி

image

பிஹாரில் மிக சக்திவாய்ந்த அரசியல் கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), 2005-க்கு பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2005-ல் ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு அலையில் நிதிஷ்-பாஜக கூட்டணி வென்றது. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிதிஷ் – பாஜக கூட்டணி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான RJD-யை வீழ்த்தி ஆட்சியை தக்க வைத்துள்ளது. RJD தற்போது 24 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.

News November 14, 2025

சற்றுமுன்: விடுமுறை… 3 நாள்களுக்கு அரசு அறிவிப்பு

image

வார விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல இன்றுமுதல் 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 920 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், TNSTC செயலி, www.tnstc.in இணையதளம் மூலம் சுமார் 15,000 பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீங்க டிக்கெட் புக் பண்ணியாச்சா?

News November 14, 2025

பிரபலங்களும் அவர்களது விலையுயர்ந்த பைக்குகளும்

image

பிரபல நட்சத்திரங்கள் பலரும் பைக்குகள் மீது தீரா காதல் கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த, சக்திவாய்ந்த பைக்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பிரபலங்களின் பட்டியலை, போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். இதில், எந்த பிரபலம், என்ன பைக் வைத்திருக்கிறார் என்ற விவரம் உள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!