News June 5, 2024

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரதீப் குமார் மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 7, 2026

திருச்சி: ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

image

ஈரோட்டில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படும் ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஏப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஈரோடு – திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 7, 2026

BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

image

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்டவற்றில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து அவர் மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரின் வேட்புமனு திருச்சி கிழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

திருச்சி: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருச்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

error: Content is protected !!