News November 28, 2024

சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் புலி சாவு: மூவர் கைது

image

நீலகிரி, கூடலூர் அருகே செலுக்காடி வனப்பகுதியில் 3 வயதுடைய ஆண் புலி இறந்து கிடந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில், சுருக்கு கம்பி கழுத்தில் சிக்கி புலி உயிரிழந்தது தெரிய வந்தது. புலியின் உடலை புலிகள் காப்பக மருத்துவர் உடற்கூராய்வு செய்து எரியூட்டபட்டது. புலிக்கு சுருக்கு வைத்து  கொன்றதாக 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

BRAKING: நீலகிரியில் டைடல் பூங்கா 1000 பேருக்கு வேலை!

image

நீலகிரியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. குன்னூர், எடப்பள்ளிக்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைய உள்ளது. சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த நியோ டைடல் பூங்கா, சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மகிழ்சியான செய்தியை அணைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News August 17, 2025

நீலகிரி: உங்கள் நிலத்திற்கு தனிப் பட்டா வேண்டுமா?

image

நீலகிரி: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

News August 17, 2025

நீலகிரி: 10வது படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!