News April 5, 2025
சுய உதவி குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் (அ) சந்தைப்படுத்தல் உருவாக்கும் வகையில் மண்டல பொது வசதி மையம் துவங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் வரும் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 5, 2025
உலக வரலாற்றில் இடம் பிடித்த தஞ்சாவூர் பீரங்கி

தஞ்சையில் சுற்றுலா வரும் பயணிகள் பார்க்கவேண்டியவற்றில் முக்கிமானது, இந்த 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி ஆகும். வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில், காணப்படும் இந்த பீரங்கி உள்ள இடத்தை பீரங்கி மேடு என்றழைக்கின்றனர். ‘ராஜகோபால பீரங்கி’ என்று பிரபலமாக அறியப்படும் இப்பீரங்கி, ரகுநாத நாயக்கரின் ஆட்சிகாலத்தில், 1620ஆம் ஆண்டு வார்க்கப்பட்ட இது, உலகின் மிகப்பெரிய ஃபோர்ஜ் வெல்டிங் இரும்பு பீரங்கியில் ஒன்றாகும்.
News April 5, 2025
தஞ்சை: உணவக உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

தஞ்சவூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவக உரிமையாளர்கள் சங்க ஆய்வு கூட்டம் நேற்று (ஏப் 04) நடைபெற்றது. இதில், அனைத்து உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் டீ, காபி, உணவு பொருட்கள் போன்றவை பார்சல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
News April 5, 2025
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

தஞ்சையில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு, சிறப்பு முகாம் வருகிற 8-ந்தேதி(செவ்வாய்) நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ள இம்முகாமில், பல துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்க உள்ளனர். இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.