News April 13, 2024
சுயேட்சை வேட்பாளர் பாதுகாப்பு வேண்டி கண்ணீருடன் புகார்

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நூர்முகமது என்ற வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அவரது பிரச்சார வாகனத்துடன் இன்று (ஏப்ரல்.13) வந்த நூர் முகமது, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல நாட்களாக கூறியும் இது நாள் வரை காவல்துறையினர் பாதுக்காப்பு வழங்கவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்து புகார் அளித்தார்.
Similar News
News February 12, 2026
கோவை அருகே பயங்கர விபத்து! ஒருவர் பலி

சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் பரத்ராஜ். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய நண்பர் ஆதித்யா, தோழி சங்கீதா ஆகியோர் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பரத்ராஜ் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News February 12, 2026
இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை

இரும்பறையை சேர்ந்தவர் மோகன்ராஜ் கடந்த ஆண்டு அக். மாதம் புளியம்பட்டியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 87 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வந்த அவர், கோபி போலீசார் வழக்கு போட்டதால் வாழ்க்கை வீணாகிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமுகை போலீசார் விசாரிக்கின்றனர்.