News November 17, 2024
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.21,60,633 காணிக்கை

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல், நேற்று திறக்கப்பட்டு கோவில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலையில் தன்னார்வலர்கள், பக்தர்கள் வாயிலாக எண்ணப்பட்டது. இதில், 21 லட்சத்து 60,633 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 1,077 கிராம் வெள்ளியும் என கோயிலுக்கு வருவாயாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 1, 2026
காஞ்சிபுரம் மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
காஞ்சிபுரம்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க
News March 1, 2026
காஞ்சிபுரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


