News December 12, 2025
சுப்பிரமணியபுரத்தில் திமுக பிரச்சாரம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வார்டு கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு திமுக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலர் ஆவுடையப்பன் தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து திமுக அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கினார்.
Similar News
News December 12, 2025
நெல்லை: திருநங்கைகள் கோஷ்டி மோதல்

பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
News December 12, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

திருநெல்வேலி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
News December 12, 2025
நெல்லை: SIR-ல் முறைகேடு? அலுவலருக்கு பறந்த நோட்டீஸ்!

சேரன்மாதேவி மாஞ்சோலை ஊத்து பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு எழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அங்கு வாக்குச்சாவடி 102-ல் 63 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு விளக்கம் அளிக்க சேரன்மாதேவி சார் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


