News December 16, 2025
சுந்தர் பிச்சை பொன்மொழிகள்

*உங்கள் கனவுகளை நம்பி, அவற்றை விரும்பி வாழுங்கள். அதுவே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி. * உங்கள் திறன்களை தினமும் வளர்த்து கொள்ளுங்கள், தினந்தோறும் புதியது ஒன்றை கற்றுக்கொள் முயற்சி செய்யுங்கள். *உண்மையான தலைவர்கள் என்பவர்கள் தங்கள் சொந்த வெற்றியை பற்றி மட்டுமல்ல, சுற்றியுள்ளவர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பார்கள். *ஆர்வத்தோடு கற்றுக்கொள்வது உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.
Similar News
News April 1, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் *நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன் *வியாபாரத்தில், நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கவில்லை. நீங்கள் ஒரு வாடிக்கையாளரை உருவாக்குகிறீர்கள்.
News April 1, 2026
TVK வேட்பாளர்களுக்கு பறந்த உத்தரவு

தவெக வேட்பாளர்கள் விசிலிடிக்க கற்றுக்கொள்ளுமாறு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது தவெக வேட்பாளர்களும், நிர்வாகிகளும் ‘விசில்’ அடித்து வாக்காளர்களை கவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசிலடிக்க தெரியாதவர்கள், அதற்காக பயிற்சி எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தவெகவின் இந்த பிரசார யுக்தி கை கொடுக்குமா? <<-se>>#TNElection2026<<>>
News April 1, 2026
NDA கூட்டணியில் புதிய கட்சி

சட்டமன்ற தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து, NDA கூட்டணிக்கு முழுமையான ஆதரவை தருவதாக உறுதியளித்துள்ளனர். அதோடு, தேர்தலில் NDA-வின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். <<-se>>#TNElection2026<<>>


