News April 26, 2025

சுந்தரவடிவேல் சுவாமிகளின் ஆருடம் நடக்குமா?

image

2026 தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும், திமுக அமைச்சர்களின் நாக்கில் சனி இருப்பதால் பலர் ஜெயிலுக்குப் போவார்கள். 2027க்கு பின் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் காலம் வரும் என்று தேனி மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார், 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் இவர் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 19, 2025

தேனி: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

தேனி மாவட்ட த்தில் IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை தாங்கள் பெற தேனியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.

News September 18, 2025

தேனியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 19.09.2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தகலுக்காக 98948-89794 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

தேனி: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

image

தேனி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!