News July 29, 2024
சுதந்திர தின முன்னேற்பாடுகள் தீவிரம்

நாட்டின் 74-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகம் எதிரே சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு பிரம்மாண்ட விழா மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், போக்குவரத்து மாற்றம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
சென்னை தாங்க எல்லாத்துலையும் First

✅சென்னை – ஆசியாவின் முதல் மாநகராட்சி
✅ஸ்பென்சர் பிளாசா – இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
✅ஹிக்கின்பாதம்ஸ் – இந்தியாவின் முதல் புத்தக நிலையம்
✅புனித ஜார்ஜ் கோட்டை – இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை
✅மெட்ராஸ் முதலை பூங்கா – இந்தியாவின் முதலாவது
✅ராயபுரம் – தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
✅சென்னைப் பல்கலைக்கழகம் – தென் இந்தியாவின் தாய் பல்கலைக்கழகம்
சென்னையின் பெருமையை மற்றவருக்கும் பகிருங்கள்
News September 20, 2025
சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழா – 2025 செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கிவைக்கிறார். 200க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த மாபெரும் கண்காட்சியில் அனைவரும் பங்கு பெறலாம். அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 20, 2025
சென்னை: தலைக்கேறிய மது போதை… காதலி மரணம்!

சென்னை மதுரவாயில் அடுத்த ஆலப்பாக்கத்தில் கணேஷ் ராம்(29) என்ற காதலனும் ராயப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி(26) என்ற காதலியும் கணேஷ் ராம் அறையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்பு ஸ்ரீ லட்சுமி கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.