News March 23, 2024
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
தி.மலை: டிகிரி போதும்..IOB வங்கியில் சூப்பர் வேலை!

தி.மலை மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்?. IOB-யில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் 200 பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக 20-க்குள் <
News August 14, 2025
தி.மலை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News August 14, 2025
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவிப்பு

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று
திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.