News March 21, 2025
சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு

சேலம், கருப்பூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் ரூ.200 வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சுங்கச்சாவடி ஊழியர்கள் காரின் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் இருக்கைகளைக் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Similar News
News July 10, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

ஜூலை 10,11,12,13 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு-மைசூரு ரயில் (16316),கன்னியாகுமரி-திப்ரூகர் தினசரி ரயில்(22503),ஜூலை 12-ல் கன்னியாகுமரி-ஸ்ரீ வைஷ்ணவ் தேவி வாராந்திர ரயில் (16317),ஜூலை 13-ல் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ்(22669),எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!
News July 9, 2025
விண்ணப்பித்த உடன் குடிநீர் இணைப்பு!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பல மாதங்கள் ஆகி வந்த நிலையில், நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, இனி விண்ணப்பித்தவுடன் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை 10 தவணைகளாக செலுத்தலாம் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
இனி தப்ப முடியாது: வாக்குமூலம் பதிவு செய்ய கேமரா!

சேலம் மாவட்டத்தில், பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சேலம் தனியார் நிறுவனம் சார்பில் 2 வீடியோ கேமராக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தனியார் நிறுவன ஊழியர்கள் உடனிருந்தனர்.