News March 31, 2026
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்தின் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வானகரம், சூரப்பட்டு, ஆத்தூர் உள்ளிட்ட 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5%-7% அதிகரிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ₹10 முதல் ₹40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ₹50 முதல் ₹200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News April 5, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

தோளில் புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு தான் இந்த கொடுமை நேர்ந்துள்ளது. ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை சக்திவேல்(22) என்ற பொக்லைன் டிரைவர் கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 5, 2026
சீமானுக்கு கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்த மக்கள்

சீமானின் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து நிதி கொடுப்பது தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், நோட்ட கொடுத்தா வோட்டு போடுற கூட்டத்துல, நோட்ட கொடுத்து வோட்டு போடுற கூட்டம் என் மக்கள் என தெரிவித்துள்ளார். இந்த அரசியல் களத்தில் தான் பெற்ற பேரன்பு இதுவெனவும் அவர் கூறியுள்ளார்.
News April 5, 2026
IPL TOSS: சென்னை அணி பவுலிங்

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


