News April 3, 2025
சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் /சார்ந்தோர்கள் நலனுக்காக சுகாதார மருத்துவ விழிப்புணர்வு முகாம் வருகின்ற 5.04.25 அன்று காலை 10 மணியளவில் அரசினர் தாய் சேய் நல மருத்துமனை, கோர்ட் வாசல், இராமச்சந்திரன் பூங்கா அருகில் சிவகங்கை என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. எனவே, இம்முகாமில் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
சிவகங்கை: Driving Licence-க்கு முக்கிய Update!

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 13, 2025
சிவகங்கை மாவட்ட மக்களே., இன்று விரைவில் தீர்வு!

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிபதியுமான அறிவொளி நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (டிச.13) 11 அமா்வுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
News December 13, 2025
சிவகங்கை: பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்.!

கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி, மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வந்த திருடர்கள் சமையல் அறையில், சத்துணவு முட்டைகளை, கேஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்டு விட்டு கணினி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


