News February 13, 2025
சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739408667049_916-normal-WIFI.webp)
காஞ்சிபுரம் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
Similar News
News February 13, 2025
கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739417240393_916-normal-WIFI.webp)
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
News February 12, 2025
பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிய ஆட்சியர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739360680262_51580132-normal-WIFI.webp)
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (12.02.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி இருந்தார்.
News February 12, 2025
82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739339505794_60420136-normal-WIFI.webp)
காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான, ‘காஞ்சி யூத் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று (பிப்.11) காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த இளையனார்வேலு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஹேமேஷ் குமார் (16), காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.