News March 26, 2025
சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. மாசுபட்ட குடிநீர் வழியாகவும் இந்த தொற்று நோய் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்ய ஊராட்சிகளை வலியுறுத்த வேண்டும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்கவும், அதிக தண்ணீர் அருந்தி நீர்ச்சத்து இழப்பை தடுக்க வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 29, 2025
தேனி: நகை ஆபரணங்கள் நீங்களும் செய்யலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி ஏப்ரல்7 தொடங்கி 13 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் ஏப்ரல்7க்கு முன் நேரில் முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
தேனியில் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற போலீசார் ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 29, 2025
போடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.