News February 17, 2025

சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

image

கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் கொந்தமூர் சர்வீஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில், 20 சீல் வைக்காத சாராய பாக்கெட்டுகள், அரை லிட்டர் சீல் இல்லாத சாராய பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் அர்ஜுனன் மற்றும் ஆனந்த், வின்சென்ட் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 6, 2026

விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் நேற்று (05.03.2026) நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் , மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

News March 6, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

image

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி ரா.மணிகண்டன்(38) புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலை தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா் . அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். அவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2026

விழுப்புரம்: ராமதாஸின் திடீர் ஆலோசனை

image

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திரளாக பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!