News August 27, 2025

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

image

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், அருள்பாலித்து வரக்கூடிய திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகப் பெருமான் உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருளி அபிஷேகங்கள் செய்து ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் விநாயகர் உற்சவர் மூர்த்தி தேர் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதற்காக மலர் மாலைகள் சாத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

News August 27, 2025

மயிலாடுதுறை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 27, 2025

மயிலாடுதுறை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

image

மயிலாடுதுறை மக்களே, மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!