News April 6, 2026
சீமான் ஒரு தேர்தல் டூரிஸ்ட்: கார்த்தி சிதம்பரம்

சீமானுக்கும் காரைக்குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்குள்ள வாக்காளர் பட்டியலில் கூட அவரது பெயர் இல்லை என்றார். கடந்த தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் தோற்ற சீமான், அதன்பின்னர் அங்கு போகவே இல்லை. அவர் கட்சி தேர்தல் நேர டூரிஸ்ட் மாதிரி வருவார்கள். பின்னர் சென்றுவிடுவார்கள் என விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 15, 2026
கோவிட் தடுப்பூசியே இறப்புக்கு காரணம்: ஷேன் வார்னின் மகன்

கோவிட் தடுப்பூசியே தனது தந்தை மரணத்துக்கு காரணம் என்று ஷேன் வார்னின் மகனான ஜாக்சன் வார்ன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், தடுப்பூசியானது தனது தந்தைக்கு ஏற்கெனவே இருந்த உடல்நல பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதை இறுதிச் சடங்கின்போதே வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களினால் தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
News April 15, 2026
நாளைமுதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

NH-ல் அனுமதிக்கப்பட்ட அதிகளவிலான எடையுடன் பயணிக்கும் வாகனங்களுக்கு நாளைமுதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதில், அனுமதிக்கப்பட்ட வரம்பை கடந்து கூடுதல் எடை 10 %-க்குள் இருந்தால், அபராதம் கிடையாது. கூடுதல் எடை 10 %-ஐ கடந்தால் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதுவே 40 %-க்கு மேல் இருந்தால் 4 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்தத் தொகைகள் ‘FASTag’ மூலம் மட்டுமே வசூலிக்கப்படும்.
News April 15, 2026
DELIMITATION: ஸ்டாலினுக்கு தெலங்கானா CM கடிதம்

தொகுதி மறுசீரமைப்புக்கு தென் மாநிலங்கள் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று ஸ்டாலினுக்கு, தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த பிரச்னையின் ஆபத்து பற்றி நீங்கள் தான் முதலில் குரல் கொடுத்தீர்கள். ஆனால், தொகுதிகளை கணக்கிட மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ள pro rata கணக்கீடும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


