News January 10, 2025
சீமானை கைது செய்ய திருப்பூர் எஸ்பியிடம் மனு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியாரை அவதூறாக பேசியுள்ளார். பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சமத்துவம் என மனித குலத்திற்கு தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வாழ்ந்த பெரியாரை இழிவாக சட்ட ஒழுங்கு சீர்கேடும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
திருப்பூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 6, 2026
திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்: 13 பேர் அதிரடி கைது!

வங்கதேசத்திலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் வங்கதேசத்தினர் அதிகளவு ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் கடந்த ஒரு வார காலமாக திருப்பூரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் முதலிபாளையம் , விஜயாபுரம் மற்றும் 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பெண்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News February 5, 2026
திருப்பூரில் இங்கு மின்தடை அறிவிப்பு!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (பிப்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜர் நகர், மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, கைக்காட்டிப்புதூர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


