News September 27, 2025
சீமானுக்கு அடிப்படை நாகரிகம் தெரியவில்லை: அதிமுக

அண்ணா, எம்.ஜி.ஆரை பற்றி இழிவாகப் பேச சீமானுக்கு தகுதியில்லை என அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இரண்டு சனியன்களை சேர்த்து விஜய் சட்டை தைத்துவிட்டதாக அவர் பேசிய நிலையில், மறைந்த தலைவர்களை எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட சீமானுக்கு இல்லை என அதிமுக சாடியுள்ளது. திரள்நிதி வசூல் செய்து உடம்பை வளர்க்கும் சீமானுக்கு எம்.ஜி.ஆரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.
Similar News
News September 27, 2025
அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர்

மூத்த பத்திரிக்கையாளர் இரா.ப.சந்திரசேகரன், சமூக ஆர்வலர் சாசா உள்ளிட்டோர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதேபோல், பல்வேறு மாற்றுக்கட்சியினரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். குறிப்பாக, கரூர் நகர் காங்கிரஸ் மகளிர் அணி தலைவரை இணைத்த விவகாரத்தில் காங்., திமுக இடையே குழப்பம் எழுந்தது. இதை தவிர்க்க மு.க.ஸ்டாலினே, மாற்றுக்கட்சியினர் இணைப்பு விவகாரத்தை நேரடியாக கையில் எடுத்துள்ளாராம்.
News September 27, 2025
ரூபாய் மதிப்பு உயர்வால் தங்கம் விலை குறையுமா?

இந்தியா – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ₹88.72ஆக முடிவடைந்தது. இதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் எதிரொலிக்கும். குறிப்பாக, ரூபாய் மதிப்பு உயரும் போது, வெளிநாட்டு நாணயங்களுக்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை குறையும். இதனால், இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News September 27, 2025
குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு..

குரூப் 2, 2ஏ தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வர்கள் முறையாக கடைபிடிக்க TNPSC அறிவுறுத்தியுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பே வந்துவிட வேண்டும் என்றும், 9 மணிக்கு மேல் வரக்கூடிய தேர்வர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் TNPSC கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு சார்பில் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே சரியான நேரத்திற்கு செல்லவும்.