News November 22, 2025

சீமானின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

image

நெல்லை பணக்குடியில் இன்று சீமான் தலைமையில் நடக்கவிருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், போராட்டத்திற்காக பணக்குடி சென்ற நாதகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, தடையை மீறி தேனியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தியதுபோல், இன்றும் போராட்டம் நடக்கும் என நாதகவினர் கூறுகின்றனர்.

Similar News

News January 27, 2026

திருவாரூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 27, 2026

தவெக கூட்டணியில் ராமதாஸ்?

image

NDA கூட்டணியில் அப்பாவை இணைக்கக் கூடாது என அன்புமணி நிபந்தனை வைத்துள்ளதாகவும், திமுக கூட்டணியில் ராமதாஸை சேர்க்கக் கூடாது என்று விசிக முரண்டு பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாள்களில் செங்கோட்டையன் மூலம் ராமதாஸை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு பலம் சேர்க்குமா?

News January 27, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹520 குறைந்தது

image

நேற்று வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று (ஜன.27) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹65 குறைந்து ₹14,960-க்கும், சவரன் ₹520 குறைந்து ₹1,19,680-க்கும் விற்பனையாகிறது. நேற்று 1 கிராம் ₹15,000-ஐ கடந்து விற்பனையான நிலையில், இன்று விலை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!