News August 5, 2024

சீனியர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கை கட்சித்தலைமை

image

சூரிய கட்சிக்கு எதிராக பேசும் கை கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், டெல்லி தலைமையிடம் அறிவாலய தரப்பில் பேசியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தலைவர்களை டெல்லிக்கு அழைத்து விளக்கம் கேட்க, கட்சியை வளர்ப்பதற்காகவே அப்படி பேசியதாக விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால், கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவித்து, கட்சியை வளர்க்க வேண்டிய தேவையில்லை என தலைமை எச்சரித்து அனுப்பியதாம்.

Similar News

News February 5, 2026

படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ்!

image

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பயிற்சியின் போது படுகாயமடைந்துள்ளார். பந்து தாக்கி முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் கண் வீங்கியும், உதடு மற்றும் மூக்கில் பலத்த காயங்களும் உள்ளன. பயிற்சி போட்டியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News February 5, 2026

பிப்.7-ல் ஆசிரியர் கலந்தாய்வு.. பள்ளிகளுக்கு உத்தரவு

image

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை EMIS தளத்தில் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல் ஆகிய 6 பாடங்களுக்கான கலந்தாய்வு பிப்.7-ல் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ளும் பணிநாடுநர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE

News February 5, 2026

வெறுங்காலில் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?

image

காலணிகள் அணியாமல் புல், மண் தரைகளில் நடப்பது மன அழுத்தத்தை குறைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால், உடல் தசைகள் சுறுசுறுப்படைவதுடன், ரத்த ஓட்டம் சீராகி நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது; தூக்கத்தின் தரம் மேம்பட்டு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாகவும் குறிப்பிடுகின்றனர். எனவே, நீங்களும் காலணிகள் அணியாமல், தினமும் 15-30 நிமிடங்கள் இயற்கையான தரையில் வெறுங்காலுடன் நடக்க தொடங்குங்கள்.

error: Content is protected !!