News November 26, 2025
சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.
Similar News
News March 28, 2026
பொன்ராஜ் பேசியது தவறில்லை: சீமான்

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து ஆபாசமாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது<<19485483>>விஜய் <<>>நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் பேசியது தவறில்லை என்றும், அது ஆதங்கத்தின் வெளிப்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் பெண்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்க, விஜய் புகார் அளித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 28, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 28, பங்குனி 14 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News March 28, 2026
தங்க வர்த்தக மையமாகும் சிங்கப்பூர்

ஆசியாவின் முதன்மையான தங்கம் வர்த்தக மையமாக மாற உள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையம் மற்றும் சிங்கப்பூர் புல்லியன் சந்தை சங்கம் இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொள்கின்றன. இந்தத் திட்டம் சிங்கப்பூரின் நிதித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதாரத் பன்முகத்தன்மையையும், உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


