News December 31, 2025
சீனாவை முந்தியது இந்தியா!

சீன கார்களை விட இந்தியாவில் தயாரித்த கார்களே இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் அதிகம் விற்பனையாகியுள்ளன. லைட்ஸ்டோன் வெளியிட்ட தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் அங்கு விற்கப்பட்ட மொத்த கார்களில் ஏறக்குறைய பாதி இந்தியாவில் தயாரானவை. நடப்பாண்டில் SA-ல் விற்கப்பட்ட வாகனங்களில் 49% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதே வேளையில் சீனாவில் இருந்து 17.1% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 7, 2026
மோடி என் மீது அதிருப்தியில் உள்ளார்: டிரம்ப்

தனக்கு மோடியுடன் நல்ல உறவு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியாவுக்கு அதிக வரிகளை விதித்ததால் மோடி தன் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரியை விதித்தது குறிப்பிடதக்கது.
News January 7, 2026
டயாபடீஸை கட்டுப்படுத்த வாக்கிங் எப்படி உதவுகிறது?

தினமும் மேற்கொள்ளும் 30 நிமிட வாக்கிங் டயாபடீஸை கட்டுப்படுத்த பலவழிகளில் உதவுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *வாக்கிங் செல்லும்போது செயல்படும் அசைவுகள் தசை சுருக்கங்கள், இரத்த ஓட்டத்தை தூண்டும். *உணவுக்குப் பிறகு விறுவிறுப்பான நடைபயிற்சி செல்வது இரத்த சர்க்கரை குறைக்க உதவும். *சர்க்கரை நோய் உள்ளவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். * நடைபயிற்சியால் சர்க்கரை நோயாளிகள் இரவு நன்றாக தூங்கலாமாம்.
News January 7, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 573
▶குறள்:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். ▶பொருள்: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.


