News December 21, 2025
சீனாவுக்கு கிடைத்த தங்க புதையல்!

கிழக்கு சீனக்கடலில் லாய்சோ கடற்கரைக்கு அருகே, ஆசியாவிலேயே கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க படிமத்தை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருந்தாலும், தங்க கையிருப்பில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்திலேயே உள்ளது. இங்கு சுமார் 3,900 டன் தங்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்க கையிருப்பிலும் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.
Similar News
News December 28, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்!

*சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை *தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும், உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும் *சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரேச் சாக்கடை ஆகிவிடும் *அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும்.
News December 28, 2025
ஹிட்லர் ஆட்சி நடத்தும் CM ஸ்டாலின் : அன்புமணி

உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்ப்பதாக அன்புமணி சாடியுள்ளார். திமுகவினரிடையே முறைகேடு தலைதூக்குமானால் சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறிய CM, அமைச்சர்களின் ஊழல் பற்றி ED அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அடித்தட்டு மக்களிடம் வீரத்தை காட்டும் நவீன ஹிட்லரின் ஆட்சி 2026-ல் வீழ்வது உறுதி என X-ல் அவர் கூறியுள்ளார்.
News December 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 563
▶குறள்:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
▶பொருள்: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.


