News November 17, 2024
சீசனையொட்டி குமரியில் 180 கேமராக்கள் பொருத்தம்: SP

கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று(நவ.,16) தொடங்கியது. இந்த சீசன் ஜனவரி 20ஆம் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இதையொட்டி யாகுமரி நகர பகுதி முழுவதும் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
குமரி: வட்டார காங்கிரஸ் தலைவர் மீது பாய்ந்த வழக்கு

குமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றுப்பாலம் முதல் திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகளும், கொடிகளும் வைத்திருந்ததாக மேற்கு மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி(50) மீது களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அவை வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News March 1, 2026
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகர்கோவில் அருகே கார் மோதி பெண் பலி

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று இவர் மீது மோதியது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


