News August 18, 2025

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது. மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவாற்றலும், செயல்திறனும் மிக்கவர். தேசத்தைத் தனது உயிராகப் போற்றுபவர்.” என கூறியுள்ளார்.

Similar News

News August 20, 2025

புதுவை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

புதுவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>>, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

டெல்லியில் 3 நாள் மாநாடு – புதுச்சேரி சபாநாயகர் பங்கேற்பு

image

சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு டெல்லியில் ஆக.23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவர் செல்வம் பங்கேற்கிறார். மேலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி, 23-ம் தேதி டெல்லி முதல்வர் ரேகா குப்தா விருந்தளிக்கிறார். 24-ல் முறைப்படி இம்மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

புதுச்சேரியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி

image

புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, 1 ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஆக.22-ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0413- 2331408/2220105 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!