News February 26, 2025
சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுப்பானடி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News March 3, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 3, 2026
மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
மதுரை : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.


