News August 3, 2024

சிவாஜி மன்னர் பாராட்டிய செஞ்சி கோட்டை

image

இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.

Similar News

News September 16, 2025

விழுப்புரம்: ஆதார் கார்டில் இதை செய்து விட்டீர்களா?

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

விழுப்புரத்தில் 8th, SSLC, +12, டிகிரி படித்தவர்களுக்கு வேலை!

image

விழுப்புரம், வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்., 19ம் தேதி நடைபெற உள்ளது. இது மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். 8th, SSLC, +12, ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. <>மேலும் தகவலுக்கு.<<>>ஷேர்!

News September 16, 2025

விழுப்புரம்: குட்கா விற்பனை செய்த இருவர் கைது!

image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து குட்கா வாங்கி வந்து, விக்கிரவாண்டி சாலை பகுதியில் விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளர் சீனிவாசன் & சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.30,000 மதிப்புள்ள 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சட்டவிரோத குட்கா விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!