News February 15, 2026

சிவராத்திரி விழாவில் கூட்டணிக்கான சிக்னலா?

image

தேர்தல் நெருங்கும் நிலையிலும் திமுகவா, அதிமுகவா என்று தேமுதிக பூவா தலையா போட்டு கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக இணையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் SP வேலுமணி, பிரேமலதா இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட போட்டோ வெளியாகியுள்ளது. இது கூட்டணிக்கான சமிக்ஞையாகவே கருதப்படுகிறது.

Similar News

News February 21, 2026

புயல் சின்னம்.. கனமழை பொளந்து கட்டும்

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதேபோல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

காவி சிந்தனையில் EPS: செல்வப்பெருந்தகை

image

உயர் சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் <<19199967>>காவி உடை அணிவித்து EPS <<>>பதிவிட்டிருப்பதாக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். RSS & பாஜகவுடன் இணைந்ததும் அவரின் சிந்தனை காவிமயமாகிவிட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியலுக்கு கட்டுப்பட்டவர் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

மகளிர் வங்கிக் கணக்கில் ₹25,000.. FACTCHECK

image

‘Women Work from Home Scheme’ திட்டத்தின்கீழ் மகளிருக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை வழங்கி, மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. இது பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையை அறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!