News March 17, 2025
சிவபெருமானுக்கு ட்ரோன் மூலம் பாலபிஷேகம்

காஞ்சிபுரம் வண்டார் குழலி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலில் 16 அடி மண்டபத்தின் மேல், 21 அடி உயரத்தில் சிவபெருமான் ஒற்றை காலில் உள்ள சிலை வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சிவபெருமான் சிலைக்கு, ட்ரோனில், 21 லிட்டர் பால் நிரப்பி அதன் வாயிலாக பாலாபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News March 17, 2025
ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் விஸ்வா (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரின் உடலைமீட்ட தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 17, 2025
அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <
News March 16, 2025
படப்பை குணா 5 வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இதனையடுத்து படப்பை குணாவும் கடந்தாண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் படப்பை குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. படப்பை குணா தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.