News September 24, 2024
சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும்: தமிழிசை

சென்னையில் இன்று செய்தியாளர்களை சத்தித்த பாஜகவை சார்ந்த தமிழிசை சௌந்தர ராஜன், “ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெற்று வருகின்றனர், அதற்கு அடித்தளமிட்டவர் ஐயா சிவந்தி ஆதித்தனார். அவருக்கு சென்னையில் ஒரு சிலை வேண்டும் என்பது நியாமான கோரிக்கை” என்றார்.
Similar News
News September 15, 2025
ராயப்பேட்டை: ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு

ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது நஸ்ருதின் என்பவரை கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை அருகே தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 15, 2025
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்திக்கும், விசிக நிர்வாகிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 22-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் உள்ள அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News September 15, 2025
சென்னையில் வெறி நாய் கடித்த நபர் உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் ரேபிஸ் தாக்கி, சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதின் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே அவரை தெருநாய் கடித்துள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 12ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட, ரேபிஸ் தொற்று அவரை தாக்கியிருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.