News November 10, 2024
சிவகிரி அருகே கஞ்சா அல்வா விற்ற இருவர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கருவட்டாம் பாறை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தேவர்குளத்தை சார்ந்த ஈஸ்வர மூர்த்தி(21) மற்றும் 17 வயது சிறுவன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கி வந்து சிவகிரி பகுதியில் விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் நேற்று(நவ.,9) போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 11, 2025
தென்காசி: மின்சாரம் புகார் சேவை எண் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது. SHARE
News December 11, 2025
தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் குறைத்தீர்ப்பு கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து விசாரணை செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.