News July 7, 2025

சிவகாசி வெடி விபத்தில் முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

image

கீழதாயில்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம், லேசாக காயமடைந்தவருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.

Similar News

News July 7, 2025

விருதுநகரில் ரூ.25 லட்சம் வரை கடன் பெறலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம்.

News July 7, 2025

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் 31.07.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான 4562-290953, 94990-55823, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News July 6, 2025

பட்டாசு வெடி விபத்து ஒரு சாபக்கேடு – பிரேமலதா விஜயகாந்த்

image

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் ஆலையின் உரிமம் ரத்து என்பது கண் துடைப்பாக இல்லாமல் இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் சட்டம், அரசாணை பிறப்பிக்க வேண்டும். பட்டாசு வெடி விபத்து விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!