News March 29, 2026
சிவகாசி: யார் இந்த தவெக வேட்பாளர் கீர்த்தனா

சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கீர்த்தனா விருதுநகரை பூர்வீகமாக கொண்டவர். பிரசாந்த் கிஷோரின் i-pac உள்ளிட்ட முன்னணி அரசியல் ஆலோசனை நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய இவர் விருதுநகரில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கடந்த 3 மாதம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வந்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்தவுடன் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
Similar News
News April 11, 2026
சிவகாசி: சரக்கு வேன் மோதி இளைஞர் பரிதாப பலி.!

சிவகாசி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 25). இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அழகுராஜா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி திருத்தங்கல் போலீஸ் விசாரிக்கின்றனர்.
News April 11, 2026
சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் சோதனை

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி, மணிகண்டன். சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமாக ஐந்து பட்டாசு ஆலைகள் மற்றும் 10 பட்டாசு கடைகள், லாட்ஜ் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு இரவு 10 மணி வரை வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.