News December 14, 2025
சிவகாசி: முத்தம் கொடுத்து மிரட்டியவர் கைது

சிவகாசி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு திருமனமாகி மனைவி உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த +2 மாணவியை ஒரு ஆண்டாக காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு நாள் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன் அதை படம் எடுத்து மிரட்டி வருவதாக மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 19, 2025
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி வழிபாடு

அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் சன்னதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
News December 19, 2025
BREAKING விருதுநகரில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ.4 அன்று தொடங்கி டிச.14 வரை நடைபெற்றது. இதனையடுத்து சற்றுமுன் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டார். இதில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 16,26,485 வாக்காளர்கள் இருந்த நிலையில் SIR க்கு பின்னர் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆக 14,36,521 ஆக உள்ளது. இதில் 1,89,964 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
ஶ்ரீவி.,: பணம் மோசடி புகார்: கே.டி.ஆர் வழக்கு ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜன.5.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


